கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் அடுத்த வாரம் வெளுத்து வாங்கவுள்ள மழை!

சென்னையில் அடுத்த வாரம் மழை நன்றாக பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் கடந்த மார்ச் முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

வெப்ப அலைக்கு இடையே அங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை காலை திடீரென மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

மேகக் கூட்டங்கள் எல்லாம் கடல்புறத்தை நோக்கி செல்கின்றன. பெருங்குளத்தூரில் நல்ல மழை பெய்துள்ளது.

நன்னிலம், கொள்ளிடம், திருவாரூர், கல்பாக்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் அடுத்த வார இறுதியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT