விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை போராடி மீட்டு வருகிறார்கள். மேலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உராய்வு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.