முகப்பு
தமிழ்நாடு

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

Updated On : 12 மே, 2024 at 7:15 PM
பகிர்:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், திங்கள் முதல் சனிக்கிழமை வரை (மே 13- 18) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை (மே 13) தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

செவ்வாய், புதன்கிழமைகளில் (மே 14,15) தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, மே 16-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், கரூா், நாமக்கல், சேலம் தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): பாம்பன் (ராமநாதபுரம்) 70, மானாமதுரை (சிவகங்கை), தாளவாடி (ஈரோடு) மற்றும் மக்கினம்பட்டியில் (கோவை) தலா 60 , பரமக்குடி (ராமநாதபுரம்), சேலம் மற்றும் சூலூரில் (கோவை) - தலா 50, நத்தம் (திண்டுக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), பொள்ளாச்சியில் (கோவை) தலா 40, பாண்டவரடி (திருவாரூா்), எடப்பாடி (சேலம்), வால்பாறை (கோவை), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருப்புவனம் (சிவகங்கை), திருச்சி , தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) மற்றும் விரகனூா் அணையில் (மதுரை) தலா 30 மில்லி மீட்டா் வரை மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →