தமிழ்நாடு

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சி குளத்தூர் கூட்டு சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில், நல்வாய்ப்பாக 60 பேர் உயிர்தப்பினர்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சி குளத்தூர் கூட்டு சாலையில் நிலை தடுமாறிய அரசு பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இப்பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூரில் இருந்து தாம்பரத்திற்கு 60 பயணிகளுடன் அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலைசென்று கொண்டிருந்தது. பேருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சிகுளத்தூர் கூட்டு சாலையை கடக்கும் பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையின் மீது ஏறி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகளும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேறும் வழி உள்ள பக்கம் சாயாமல் எதிர்புறத்தில் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் எளிதாக வெளியேற முடிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீஸார் விபத்தில் சிக்கிய பயணிகளை மாற்று பேருந்து மூலம் தாம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கவிழ்ந்த பேருந்தை கிரேன் உதவியால் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

SCROLL FOR NEXT