தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!
திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரனை சம்ஹாரம் செய்ய அவதரித்த முருகப் பெருமானின் அவதார நட்சத்திர தினம் வைகாசி விசாக நட்சத்திரம் எனப்படுகிறது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த விடுமுறை அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 8 (சனிக்கிழமை) ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.