கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி சதவிகிதம் 91.17%.

Ravivarma.s

தமிழகத்தில் 2023-24-ஆம் கல்வியாண்டு பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று காலை வெளியிட்டது.

தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் 3,35,396(87.26%) பேரும், மாணவிகளில் 4,04,143(94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் 90.93 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.24 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளிகள் 85.75%, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 92.36%, தனியார் பள்ளிகள் 98.09%, இருபாலர் பள்ளிகள் 91.61%, பெண்கள் பள்ளிகள் 94.46% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

241 அரசுப் பள்ளிகள் உள்பட 1,964 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிளஸ்-2 பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 6 -ஆம் தேதி வெளியாகின. இதைத்தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

SCROLL FOR NEXT