அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடுஅடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (மே 16) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) திண்டுக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், திருவள்ளூர், சென்னை, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.