முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். 
தமிழ்நாடு

ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை!

ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

DIN

கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை, விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த பிப். 12-ஆம் தேதி உறுதி செய்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வு, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT