முகப்பு
தமிழ்நாடு

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

Updated On : 18 மே, 2024 at 12:56 PM
கோப்புப் படம்.
பகிர்:

தூத்துக்குடி : இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக விசைப்படகுடன் இலங்கை மீனவர்கள் 7 பேரை தூத்துக்குடி கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான "வைபவ்' ரோந்து கப்பல் மூலமாக கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இலங்கை பதிவு எண் கொண்ட மீன்பிடி விசைப்படகு இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து, படகுடன் அவர்களை தூத்துக்குடிக்கு அழைத்து வருகின்றனர்.

இவர்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 9 மணிக்கு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.