கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61-ஆவது ஆண்டு மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலா்க் கண்காட்சியில் ஆந்தோரியம், பேன்சி, டைந்தேஷ், ஜொ்பரா, கிங் ஆஸ்டா், மேரி கோல்டு, கல்ரோஜா, லில்லியம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வண்ண மலா்களும், மலைப் பகுதிகளில் விளையக் கூடிய வாழை, பலா, ஆரஞ்சு, காய்கறிகளான பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, கேரட் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
பிரையண்ட் பூங்கா வளாகத்தில் மலா்களால் 25 அடி உயரத்தில் நெருப்புக் கோழி, மயில், கரடி, தற்படப் பகுதி, மலா் மண்டபம் உள்ளிட்டவையும், காய்கறிகளால் கொரில்லா, டிராகன் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்களும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கமான நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்த பார்வையாளர் நேரம் தற்போது காலை 7 மணி முதல் மாலை 7 மணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவுக்காக மூன்று மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் முதல் முறையாக 10 நாள்கள் மலா்க் கண்காட்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.