முகப்பு
தமிழ்நாடு

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

தேனி மாவட்டம் மேகமலை அருவிக்கு செல்ல 3 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 மே, 2024 at 8:48 AM
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன.

இந்த பேரூராட்சிக்குள்பட்ட வனப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால், மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், தேனி மாவட்டத்துக்கு இன்றும்(மே 19), நாளையும்(மே 20) மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Advertisement

இந்த நிலையில், மேகமலை அருவிக்கு 3 நாள்களுக்கு (மே 21 வரை) செல்வதற்கு தடை விதித்து அம்மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.