பேருந்து நிலையத்திற்குள் தேங்கி நின்ற மழை நீர். 
தமிழ்நாடு

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் விராலிமலையில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் அன்னவாசல் 69 மி.மீ., குடுமியான்மலை 67 மி.மீ., இலுப்பூர் 82 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக விராலிமலையில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

இதன் ஒரு பகுதியாக விராலிமலை பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதால் பேருந்துகள், பயணிகள் பேருந்து நிலையம் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

விராலிமலை கடைவீதியில் பெய்த மழை.

கொட்டி தீர்த்த கனமழையால் பேருந்து நிலையத்தின் உள்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளித்தது.

தற்போது மழை நின்றதை தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்குள் தேங்கி நின்ற நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது.

விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்த இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT