தமிழ்நாடு

சிங்கப்பூரை அச்சுறுத்தும் புதிய வகை கரோனா: மக்கள் பீதியடையத் தேவையில்லை!

சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கரோனா தொற்றின் உருமாறிய கேபி.2 வகை அதிகம் பதிவாகி வருகிறது.

DIN

சிங்கப்பூரில் பரவிவரும் புதிய வகை கரோனாவால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்,

சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கரோனா தொற்றின் உருமாறிய கேபி.2 வகை அதிகம் பதிவாகி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் கரோனா தொற்றால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கரோனாவால் இந்தியாவில் எந்தவித பயமோ, பதற்றமோ தேவையில்லை. இந்த வகை கரோனா தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகியுள்ளது.

இந்த மாறுபாடு இதுவரை லேசான தொற்றுநோயை மட்டுமே தருகிறது. இதுவரை கடுமையான தொற்றும் எதுவும் பதிவாகவில்லை.

கரோனா மற்ற காய்ச்சலைப் போலவே பொதுவான சுவாச நோய்த் தொற்றாக மாறிவிட்டது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அலைகள் கூட வர வாய்ப்புள்ளது ஆனால் பீதியடையத் தேவையில்லை.

தமிழக மக்களிடம் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே எந்தச் சூழலையும் எதிர்கொள்ள உள்கட்டமைப்பும் வசதிகள் தயாராக உள்ளது. எனவே மக்கள் பீதியடை தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT