தமிழ்நாடு

டிடிஎஃப் வாசன் உதிரிபாகக் கடைக்கு காவல்துறை நோட்டீஸ்!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகனப் பயணம் மூலம் யூடியூப்பில் பிரபலமானவர். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வந்தார்.

கடந்தாண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும், போக்குவரத்து காவல்துறை அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது.

இந்நிலையில், சென்னை அயப்பாக்கத்தில் உள்ள டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன உதிரிபாகக் கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிக சப்தம் எழுப்பக்கூடிய சைலன்சர்களை விற்பனை செய்ததாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT