முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

Updated On : 22 மே, 2024 at 2:41 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ள நிலையில், தென் கடலோர மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை வரை கனமுதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம்

தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவடைந்து, புதன்கிழமை (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், இந்தப் புயல் சின்னம் வடகிழக்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 24) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மையம்கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →