தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: ஆயுதப்படை காவலரிடம் 4 மணி நேரமாக விசாரணை!

வேங்கைவயல் விவகாரத்தில் ஆயுதப்படை காவலரிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே ஊரைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலரிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை காலை முதல் 4 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை நிஜாம் குடியிருப்பிலுள்ள சிபி சிஐடி அலுவலகத்தில், தஞ்சை துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத் தலைமையிலான போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக விசாரணை நடத்திட 161 சிஆர்பிசி சட்டப் பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பும் போலீஸார் இந்த முறை 41 ஏ பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி வருவது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

வேண்டும் இந்த விதிமுறைகள்!

வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT