முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை: இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மழை காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல், வீடு திரும்புவோர் சிரமம்

Updated On : 25 மே, 2024 at 2:32 PM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மழையை எதிர்பார்த்த மக்களுக்கு கடந்த சில நாட்களாக கோடை மழை வரப்பிரசாதம் போல் பொழிந்து வருகிறது. மேலும் ஒருசில மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்குகிறது.

இந்த நிலையில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவித்தப்படி இன்று மாலை சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், பெரம்பூர், அயனாவரம், வியாசர்பாடி , புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இருப்பினும் மழை காரணமாக பணி முடிந்து வீடு திரும்புவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (மே 25) முதல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(சனிக்கிழமை) இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

*சென்னை

• திருவள்ளூர்

*காஞ்சிபுரம்

*செங்கல்பட்டு

*திருவண்ணாமலை

*ராணிப்பேட்டை

*கன்னியாகுமரி

*நெல்லை

*தென்காசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.