கோப்புப் படம். 
தமிழ்நாடு

குட்கா பொருட்களுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை நீட்டிப்பு

DIN

தமிழகத்தில் குட்கா, புகையிலைப் பொருள்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குட்கா, புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மே 23-ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இப் புகையிலைப் பொருள்களுக்கான தடை 2025 மே 23 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT