தமிழ்நாடு

மே 28-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

கோடை விடுமுறையையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.

DIN

மேத மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே 28-ம் தேதி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன.

பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

வண்டலூர் உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துவருகின்றனர்.

இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (மே.28) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும் என்றும், வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் நெகிழி பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT