முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.53,760-க்கு விற்பனை

Updated On : 27 மே, 2024 at 5:48 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்கப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.6720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனையாகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →