கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆளுநர் மாளிகைக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர், மேலும் கூடுதல் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், குண்டு வைத்திருப்பதாக வெளியான தகவல் புரளி எனத் தெரியவந்தது. மர்ம நபரின் தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மிரட்டல் விடுத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தேவராஜ் என்று தெரியவந்தது.

மேலும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்த நிலையில், அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT