கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 10-ல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதுவையில் வரும் ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை கல்வித்துறை முன்னதாக அறிவித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT