விவேகானந்தர் மண்டபம் 
தமிழ்நாடு

விவேகானந்தர் மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் திடீர் வெளியேற்றம்!

விவேகானந்தர் மண்டபத்தில் திடீரென சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்

DIN

விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்படுவதால் சுற்றுலா சென்றோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பிரதமர் மோடி மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தியானத்துக்காக தில்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கு விவேகானந்தர் தியான மண்டபத்தில், ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருக்கவுள்ளார்.

இருப்பினும், விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீபாத மண்டபம் வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டும், மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டும் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யவிருக்கும் விவேகானந்தர் மைய மண்டபம், தியான மண்டபம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் திடீரென சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து வெளியேற்றப்படுவதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் என கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT