குரங்கம்மை மருந்து Center-Center-Delhi
தமிழ்நாடு

ஷார்ஜாவிலிருந்து திருவாரூர் வந்தவருக்கு குரங்கம்மை அறிகுறி?

தீபாவளி கொண்டாட, ஷார்ஜாவிலிருந்து திருவாரூர் வந்தவருக்கு குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி

DIN

ஷார்ஜாவிலிருந்து கிளம்பி, சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட ஆசையாக திருவாரூர் வந்த இளைஞருக்கு குரங்கம்மைக்கான காய்ச்சல் அறிகுறி இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த 28 வயது இளைஞர் ஷார்ஜாவில் பணிபுரிந்து விட்டு தீபாவளியன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.

விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். உடல் வெப்பநிலை பரிசோதித்த போது லேசான குரங்கமை அறிகுறி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முற்பட்டனர். அப்பொழுது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். திருச்சியில் தனக்கு உதவ யாரும் இல்லாததால், திருவாரூர் வந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளார்.

அவரிடம், காவல்துறையினரும் மருத்துவர்களும் இணைந்து திருவாரூர் மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை என்று அவரிடம் தெரிவித்து மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். தற்போது தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட முடிவுகள் வந்தவுடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிடும் என திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT