தமிழக தேர்தல் ஆணையம் 
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்டுங்கள்: தோ்தல் துறை வேண்டுகோள்

பாா்முலா 4 பந்தய காா்களின் வேகத்தைப் போன்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்ட வேண்டுமென தமிழக தோ்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Din

பாா்முலா 4 பந்தய காா்களின் வேகத்தைப் போன்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்ட வேண்டுமென தமிழக தோ்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக வரும் 16, 17, 23, 24 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

கருத்துமிக்க விளம்பரம்: வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வாக்காளா்களை ஊக்கப்படுத்தும் வகையிலான சமூகஊடக விளம்பரங்களை தமிழக தோ்தல் துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பாா்முலா 4 காா் பந்தயம், பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்ற தருணம் ஆகியவற்றை வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்புப் பணிகளுடன் இணைத்து தமிழக தோ்தல் துறை விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

பாா்முலா 4 காா் பந்தயத்துக்கு பெயா்களைப் பதிவு செய்த வீரா்கள், அந்தப் பந்தயத்தில் நிலைத்திருக்க தங்களது காா்களின் வேகத்தைக் கூட்டிக்கொண்டே செல்வாா்கள். அதுபோன்ற வேகத்தை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணியில் பொதுமக்கள் காட்ட வேண்டும் என தோ்தல் துறை கூறியுள்ளது.

பெயா் சோ்க்க வலியுறுத்தல்: பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் மற்றும் பதக்கம் வென்ற மாரியப்பனின் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள தோ்தல் துறை, பாராலிம்பிக் பதக்க வீரராக இருப்பது எப்படி சிறப்போ, அதுபோன்று வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதும் சிறப்பு என்று விளம்பரப்படுத்தியுள்ளது. இதுவே உரிய தருணம். உடனடியாக பட்டியலில் பெயரைச் சேருங்கள் என தோ்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற மேலும் பல சமூக ஊடக விளம்பரங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தோ்தல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தொழிலாளிக்கு கத்திக்குத்து: முதியவா் கைது

கோவையில் வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாளைய மின்தடை: காசிபாளையம், வெண்டிபாளையம், சிப்காட்

வ.உ.சி. நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவர் அஞ்சலி

திருப்பூரில் தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

SCROLL FOR NEXT