முகப்பு
தமிழ்நாடு

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நவ. 5-ல் தொடக்கம்!

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் குறித்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Updated On : 3 நவம்பர், 2024 at 7:00 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் குறித்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டிகள் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.

மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அவர்களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

'புக் மை ஷோ' இணையதளத்தில் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு நபருக்கு ரூ. 100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செஸ் ஆர்வலர்கள் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →