முகப்பு
செய்திகள்

கூஃபிஜென்னை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்..! 1 கோடி பார்வைகளைக் கடந்த நடன விடியோ!

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இன்ஸ்டா பிரபலத்தை வீழ்த்தியது குறித்து...

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:52 AM
விஸ்வநாதன் ஆனந்திடம் தோல்வியுற்றதால், கூஃபிஜென் நடனமாடும் காட்சிகள். - படங்கள்: இன்ஸ்டா / கூஃபிஜென் செஸ்.
பகிர்:

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இன்ஸ்டா பிரபலம் கூஃபிஜென்னை 3 போட்டிகளிலும் வீழ்த்தியுள்ளார்.

பலரையும் தோற்கடித்து, நடனமாட வைத்த கூஃபி ஜென்னை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியதால் இன்ஸ்டாவில் இணையவாசிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் செஸ் விளையாட்டு போட்டிகளைச் சிறப்பாக விளையாடும் பல வீரர்கள், வீராங்கனைகள் இருக்கிறார்கள்.

Advertisement

தமிழகத்தில் இதுவரை 36 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளார்கள். கடைசியாக ராகுல் விஎஸ் கிராண்ட் மாஸ்டராக உருவானார்.

யார் இந்த கூஃபிஜென்?

சமீபத்தில் செஸ் போட்டிகளை சமூக வலைதளத்தில் தனியாளாக இருந்துகொண்டு புகழ்பெறச் செய்தவர்தான் கூஃபிஜென் செஸ்.

இன்ஸ்டாகிராமில் 'கூஃபிஜென் செஸ்' என்ற கணக்கில் செயல்படும் இவர் மிகவும் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தார்.

1 கோடி பார்வைகளைக் கடந்த கூஃபிஜென் நடன விடியோ

விளையாட்டில் தோற்பவர்களை நடனம் ஆட வைத்து மிகவும் புகழ்பெற்றார். இந்நிலையில், கூஃபிஜென்னை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 3 போட்டிகளிலும் வீழ்த்தியுள்ளார்.

எல்லோரையும் நடனம் ஆட வைக்கும் கூஃபிஜென் தற்போது தோல்வியுற்று நடனமாடியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் பாடலுக்கு கூஃபிஜென் ஆடிய நடனம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவரிடம் தோல்வியுற்ற பலரும் இந்த விடியோவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த விடியோவிற்கு 1 மில்லியன் (10 லட்சம்) லைக், 10 மில்லியன் (1 கோடி) பார்வைகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Viswanathan Anand beats Goofygen chess..! Dance video that has crossed 1 crore views!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments