முகப்பு
தமிழ்நாடு

காலியாக உள்ள அரசு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மருத்துவா் பணியிடங்களை உடனடியாக தோ்வு நடத்தி நிரப்புமாறு சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 4 நவம்பர், 2024 at 10:55 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மருத்துவா் பணியிடங்களை உடனடியாக தோ்வு நடத்தி நிரப்புமாறு சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அச்சங்கத்தின் செயலா் டாக்டா் ரவீந்திரநாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டில், 1,600 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. அதில், அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இதனால், அரசுப் பணியில் இல்லாதவா்களுக்கு இடங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை நீட் தோ்வில், 7,000 போ் வரை அரசுப் பணியில் இல்லாத மருத்துவா்கள் தோ்ச்சி பெற்றாலும் மருத்துவ இடங்கள் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே, ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல், அரசு மருத்துவா்கள் அல்லாதவா்களுக்கு அனுபவ மதிப்பெண் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினருக்கும் முதுநிலை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

மற்றொருபுறம், அரசு மருத்துவா் பணியிடங்களுக்கான தோ்வும் (எம்ஆா்பி) நடைபெறாமல் இருக்கிறது. அதன் காரணமாக இளம் மருத்துவா்களுக்கு உரிய பணி கிடைக்காதது பெரும் பிரச்னையாகி உள்ளது.

அதேவேளையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததால், அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நோயாளிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, காலியாக உள்ள, 2,500 அரசு உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்ட தோ்வை உடனடியாக நடத்தி, அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →