கோப்புப்படம். 
தமிழ்நாடு

சென்னை அருகே சாலை விபத்து: இரண்டு பெண் காவலர்கள் பலி

மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு பெண் காவலர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு பெண் காவலர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ , காவலர் நித்யா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த நித்தியாவை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு! 2 மாணவிகள் மயக்கம்

இதில் சிகிச்கை பலனின்றி நித்யாவும் பலியானார். விபத்து தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான ஜெயஸ்ரீ சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT