முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணி: விழுப்புரம் ரயில் பகுதியளவில் ரத்து!

ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணியால் விழுப்புரம் ரயில் பகுதியளவில் ரத்து.

தமிழ்நாடு

ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணி: விழுப்புரம் ரயில் பகுதியளவில் ரத்து!

ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணியால் விழுப்புரம் ரயில் பகுதியளவில் ரத்து.

Updated On : 4 நவம்பர், 2024 at 3:13 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் -திருச்சி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகிலுள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ரயில்கள் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மற்றும் ரயில் நிறுத்தி இயக்கம் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண். 06891) நவம்பர் 6 முதல் 21 ஆம் தேதி வரை பொன்மலை -திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் பொன்மலையுடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில் திருச்சியிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் திருச்சி - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண். 06892) திருச்சி சந்திப்பு - பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே நவம்பர் 6 முதல் 21-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.09 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வண்டிஎண்.16127) நவம்பர் 6 முதல் 21-ஆம் தேதி வரை வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 10 நிமிடங்களும், நாகர்கோவிலிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் வரை இயக்கப்படும் விரைவு ரயில் (வண்டிஎண். 16352) நவம்பர் 7,10,14,17,21 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும் நிறுத்தி இயக்கப்படும்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டிஎண். 12666) நவம்பர் 9,16 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும், ராமேசுவரத்திலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம் - புவனேசுவரம் அதிவேகவிரைவு ரயில் (வண்டி எண். 20895) நவம்பர் 10,17 தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 40 நிமிடங்களும், வாராணாசியிலிருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்படும் காசித் தமிழ் விரைவு ரயில் (வண்டி எண். 16368) நவம்பர் 12,19 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 40 நிமிடங்களும் நிறுத்தி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →