டி-ஷர்ட் எக்ஸ் பக்கத்தில்
தமிழ்நாடு

டி-ஷர்ட்டில் லாரன்ஸ் பிஷ்னோய்: என்ன சொல்கின்றன இ-வணிக நிறுவனங்கள்?

டி-ஷர்ட்டில் லாரன்ஸ் பிஷ்னோய் படம் இடம்பெற்றிருப்பது பற்றி இ-வணிக நிறுவனங்கள் விளக்கம்

DIN

டி-ஷர்ட்டில் ரௌடி கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், இந்தியாவில், ஆன்லைன் மூலம் பொருள்களை விற்கும் இ-வணிக நிறுவனங்கள் கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருக்கின்றன.

கடும் சர்ச்சை எழுந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு இ-வணிக நிறுவனம் மட்டும் தனது விற்பனைப் பட்டியலிலிருந்து டி-ஷர்ட்டை நீக்கிவிட்டதாக பதிலளித்துள்ளது.

இதுபோன்றதொரு பொருள் விற்பனை செய்யப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்ததால், உடனடியாக விற்பனையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், எப்போதும், பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய இ-வணிக நிறுவனமாகவே இருக்கும் என்றும் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மீஷோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த பொருள் விற்பனையில் இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். மீஷோ நிறுவனம் எப்போதும் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய இ-வணிக நிறுவனமாகவே இருக்கும் என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எக்ஸ் தளத்தில், இதுபோன்ற டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்திருப்பதாகவும், இது ஆன்லைன் தீவிரவாதம் என்றும் பயனர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட்களுடன் பதிவிட்டதன் மூலம் இந்த விவகாரம் கடுமையான விமர்சனத்தைப் பெற்றது.ங

இ-வணிக நிறுவனத்தில் கேங்ஸ்டர் என்றும், தி ரியல் ஹீரோ என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் படத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் டி-ஷர்ட்கள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் ஸ்க்ரீன் ஷாட்களை பதிவிட்டு, கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பல குற்றவாளிகளின் புகைப்படங்கள் ஏற்கனவே டி-ஷர்ட்டுகளில் இடம்பெற்று விற்பனைக்கு வந்திருப்பதகாவும் பலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT