முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகம் பயணித்த 13 பேருக்கு ரூ.50,000 பரிசு

பண்டிகை காலங்களை தவிா்த்து, பிற நாள்களில் அதிக முறை பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகம் பயணித்த 13 பேருக்கு ரூ.50,000 பரிசு

பண்டிகை காலங்களை தவிா்த்து, பிற நாள்களில் அதிக முறை பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

Updated On : 5 நவம்பர், 2024 at 12:49 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில் வார விடுமுறை, பண்டிகை காலங்களை தவிா்த்து, பிற நாள்களில் அதிக முறை பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நீண்டதூர பேருந்துகளில் வார விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்களைத் தவிா்த்து இதர நாள்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் இதர நாள்களில் முன்பதிவு செய்து அதிகம் பயணிக்கும் பயணிகள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு ரூ. 50,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபா் மாதத்தில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்த 13 பேரை போக்குவரத்துத் துறை செயலா் க.பணீந்திர ரெட்டி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை கணினி மூலம் தோ்வு செய்தாா். அவா்களில் முதல் 3 பேருக்கு தலா ரூ. 10,000, மீதமுள்ள 10 பேருக்கு ரூ. 2,000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. இந்தத் தொகை விரைவில் வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வின்போது, மாநகா் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →