கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தத் தேவையான நிதியை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: கடல் ஆமைகளை பாதுகாக்க தனியாக காவலா்கள் நியமிக்கப்படுவா் எனவும், அதுகுறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் சட்டப் பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அதுகுறித்த கடிதத்தை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அரசுக்கு அனுப்பியிருந்தாா். அவரது கடிதத்தை நன்கு பரிசீலித்த தமிழக அரசு, கடல் ஆமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த ரூ.25 லட்சமும், அதுகுறித்த கருத்தரங்கங்களை நடத்த ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.35 லட்சம் ஒதுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.