கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை X/ANI
தமிழ்நாடு

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை

கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடியில் சிறப்பு பூஜை.

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம் கிராமத்தில் பிறந்த பி.வி.கோபால் ஐயர் - ராஜம் தம்பதியரின் மகள்கள் சியமளா, சரளா.

பின்னர், அரசு வேலை கிடைத்ததையடுத்து கோபால் ஐயர் குடும்பத்துடன் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு வெளியூர் சென்று விட்டார். தொடர்ந்து அவரது ரத்த சொந்தங்களும் துளசேந்திரபுரத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியேறிவிட்டனர்.

கோபால் ஐயர் சென்னையில் வசித்த போது, மகள் சியமளா அமெரிக்காவில் சட்டம் படிக்கும் போது உடன் படித்த டொணால்ட் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கமலா, மாயா என இரு பெண் குழந்தைகள் பிறந்த பின் டொனால் டை சியமளா விவகாரத்து செய்தார். இதில், கமலா, தனது தாயார் சியமளா போல், அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றதுடன் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு அரசியலில் நுழைந்தார்.

தற்போது , அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இன்று நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார்.

இந்த நிலையில், கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள தாய் வழி குடும்ப குலதெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ சேவக பெருமாள் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில்  குடமுழுக்குவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.5 ஆயிரம் நன்கொடையை சித்தி சரளா மூலம் கமலா ஹாரிஸ் வழங்கியுள்ளார். இதே போன்று மடப்பள்ளிக்கு தாத்தா கோபால் ஐயர் நிதி வழங்கியிருக்கிறார். இவைகள் அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடியக்கரையில் பலத்தக் காற்று

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

SCROLL FOR NEXT