கனமழை எச்சரிக்கை 
தமிழ்நாடு

கையில் குடை உள்ளதா? சென்னையில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்.. என்ன சொல்கிறது வானிலை..?

DIN

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் தொடங்கியதிலிருந்து இதமான காலநிலையும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது. ஆனால் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை முதல் கனமழை ஆங்காங்கே பெய்து வருகின்றது. வாகன ஓட்டிகள், வேலைக்குச் செல்பவர்களுக்கு ஒருவித இடையூறு இருந்தாலும்.. குளிர்ந்த காலநிலை மனதை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக,

07.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.11.2024: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.11.2024: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.11.2024: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.11.2024: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.11.2024: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை

அதிகபட்சமாக பொன்னேரி 9, காரைக்கால் 7, மணலி (சென்னை), காரைக்கால் தலா 6, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடை எடுத்துச் செல்லுங்கள்.. இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!

ஒட்டுமொத்த கிராமத்தை ஒரே வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுப் பொருள்களை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

ஏதேன் தோட்டம்... பிரணிதா!

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தது யார்? தமிழர்களைத் தடுப்பதுதான் திராவிடமா?

SCROLL FOR NEXT