நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சியினரும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | தேர்தல் தோல்வி குறித்து கமலா ஹாரிஸ் பேசியது என்ன?
அந்தவகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
'பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின்தொண்டு சிறக்க விழைகிறேன்!' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி உடன்பாடு மேற்கொண்டது. அதன்படி மாநிலங்களவையில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளிக்க, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.