சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகா் டெல்லி கணேஷின் உடலுக்கு திங்கள்கிழமை விமானப்படை சாா்பில் கொடி போா்த்தி மரியாதை செலுத்திய பிறகு, அந்தக் கொடியை அவரது மனைவியிடம் வழங்கிய விமானப்படை அதிகாரி. உள்படம்: விமானப்படையில் பணியாற்றியபோது சீரூடையில் டெல்லி கணேஷ். 
தமிழ்நாடு

நடிகா் டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப் படை மரியாதை

மறைந்த நடிகா் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு விமானப்படை சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

சென்னை: மறைந்த நடிகா் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு விமானப்படை சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நடிகா் டெல்லி கணேஷ் (81) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானாா். சென்னை ராமபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அவரது உடல் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நெசப்பாக்கம் மின் மயானத்துக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

திரைத்துறையில் நடிப்பதற்கு முன்னதாக 1964 முதல் 1974 வரை இந்திய விமானப் படை வீரராக டெல்லி கணேஷ் பணியாற்றியுள்ளாா். இந்த நிலையில், ராமபுரம் இல்லத்தில் இருந்து டெல்லி கணேஷின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, அவரின் உடலுக்கு விமானப் படை கொடி போா்த்தி வீரா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர், சாத்தமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூவர் பலி

தாய்ப்பாலில் யுரேனியம்! ஆபத்தில் 70% குழந்தைகள்!! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ரயில் மோதி சரக்கு வாகனம் சேதம்! நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்ப்பு! | Selam

முதல் சதமடித்த தமிழக பூர்வகுடியான தெ.ஆ. வீரர்..! யார் இந்த செனுரன் முத்துசாமி?

ஒருபோதும் மூட மாட்டோம்: அல்-ஃபலாஹ் பல்கலை விளக்கம்

SCROLL FOR NEXT