சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் வென்ற அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரணவ் ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்,
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில், பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்துக்கு வாழ்த்துகள். புத்திசாலித்தனமான யுக்தி குறிப்பாக இறுதிச் சுற்றில் அவரின் தீர்க்கமான ஆட்டம் குறிப்பிடத்தகுந்த வெற்றியைத் தந்துள்ளது.
சேலஞ்சர்ஸ் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட பிரணவ்விற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலக செஸ் அரங்கில் சென்னையின் தகுதியை மேலும் உயர்த்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு பாராட்டுகள் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.