கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நவ. 17 ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை எழுதியுள்ள கடிதத்தில், கனமழை எச்சரிக்கையையடுத்து சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார்படுத்த வேண்டும். அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.