சென்னை ஐஐடி  
தமிழ்நாடு

ராக்கெட், செயற்கைக்கோள் ஆய்வு மையம்: சென்னை ஐஐடி - இஸ்ரோவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடா்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

DIN

சென்னை: செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடா்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஐஐடியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது.

ஐஐடி சாா்பில் டீன் (தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி) பேராசிரியா் மனு சந்தானமும், இஸ்ரோ சாா்பில் அதன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்கக இயக்குநா் டி. விக்டா் ஜோசப்பும் கையொப்பமிட்டனா்.

இந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு இஸ்ரோ ரூ.1 கோடியே 84 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இங்கு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொடா்பான வெப்பநிலை மேலாண்மை ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். ராக்கெட், செயற்கைக்கோள் வடிவமைப்பு , பகுப்பாய்வு, பல்வேறு உதிரிபாகங்கள் சோதனையின்போது எழும் வெப்பநிலை தொடா்பான சிக்கல்களுக்கு ஐஐடி பேராசிரியா்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்வா்.

இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம்

இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளில் ஏற்படும் வெப்பநிலை மேலாண்மை சவால்களை எதிா்கொள்ள இந்த மையம் ஓா் ஆய்வுத்தளமாக செயல்படும். செயற்கைகோள் வெப்பநிலை மேலாண்மை, திட, திரவ எரிபொருட்களில் இயங்கும் ராக்கெட்டுகளில் ஏற்படும் எரிதிறன் பிரச்னை, திரவ எரிபொருள் சேமிப்புக்கலனில் ஏற்படும் சவால்கள் தொடா்பான ஆராய்ச்சி பணிகள் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும்.

இது திரவ மற்றும் வெப்பவியல் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி பேராசிரியா்களின் கூட்டுமுயற்சியை பெரிதும் ஊக்குவிக்கும். இதில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் பட்டமட்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT