மாதவரம் ரவுண்டானா அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம் ரவுண்டானா அருகே லாரிகளால் தொடரும் விபத்துகளை, மாதவரம் போக்குவரத்து போலீசார் கண்டு காணாமல் போவதாக மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை மாதவரம் நான்கு வழிச் சாலை ரவுண்டானா அருகே இன்று முற்பகல், மஞ்சம்பாக்கம் டோல்கேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வழியில் வந்த சரக்கு லாரி, ஸ்கூட்டி மீது மோதியதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டியில் வந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், விபத்து நடந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதே போன்று சம்பவம், இரண்டு நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் நிகழ்ந்துள்ளது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வத்தின் மனைவி இரண்டு கால்களை இழந்த நிலையில் அவரது தோழி, கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் பலியாகியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.