முகப்பு
தமிழ்நாடு

மருத்துவர் சங்கத்துடன் இன்று மாலை பேச்சுவார்த்தை: துணை முதல்வர் உதயநிதி

மருத்துவர் சங்கத்துடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என துணை முதல்வர் உதயநிதி தகவல்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:21 AM
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, அவரது தலையில் 4 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டம் அறிவித்திருக்கும் மருத்துவர் சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துளள்ர்.

அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைந்தார் துணை முதல்வர் உதயநிதி.

அங்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்த கண்காணிக்கப்பட்டு வருகிறது, அவரது தலையில் 4 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறோம். ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால், அவர் மீது சந்தேகம் எழவில்லை என்றும் துணை முதல்வர் உதயநிதி கூறியிருக்கிறார்.

மருத்துவர் பாலாஜி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவர் அவர். நோயாளிக்கு, சர்வதேச தரப்படி என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவர் பாலாஜிதான், அவரது மகனிடம் நிலைமையை விளக்கியிருக்கிறார். ஓமந்தூரார் மருத்துவமனையில் பல ஆண்டு காலம் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை அளித்த சிறந்த மருத்துவர், சிறந்த மனிதர். நோயாளிகளிடமும் தன்மையுடன்தான் நடந்துகொள்வார் என்று மருத்துவமனை மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கும் மருத்துவ சங்கங்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது என்று உதயநிதி கூறியிருக்கிறார்.

தொடர்ந்து இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் என்றாலே சரியான சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பரவிடக்கூடாது, அது சரியானதும் இல்லை, இங்கு பல மருத்துவர்கள் ஆத்மார்த்தமாக சேவையாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.