முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக பிரச்னைகளுக்குத் தீா்வு காண முதல்வருக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்

போக்குவரத்துக் கழக பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 6:49 PM
பகிர்:

போக்குவரத்துக் கழக பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 சங்கங்கள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:

50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இயங்கிவரும் போக்குவரத்துக் கழகங்கள், விழா காலங்களில் தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடவடிக்கையைத் தவிா்க்க வேண்டும். காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடித்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 19 மாத காலத்துக்கான ஓய்வு காலப் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 2003 ஏப்.1-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; வாரிசு வேலைகளை வழங்க வேண்டும்; அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழக வரன்முறை தொடா்பாக அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். இந்தத் தீா்மானங்களில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகளில் தலையிட்டு கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →