தவெக விஜய் கோப்புப்படம்.
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்! - விஜய் வாழ்த்து

குழந்தைகள் நாளையொட்டி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.

DIN

குழந்தைகள் நாளையொட்டி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகள் நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல். ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.

நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்!

குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT