கோப்புப் படம் 
தமிழ்நாடு

தக்காளி விலை 22% சரிவு! மத்திய அரசு

தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் 22 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

DIN

தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் 22 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

மழையால் வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது வரத்து அதிகரித்து வருவதால், விலை சரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த இரு மாதங்களாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால் இந்த மாதம் 22 சதவீதம் தக்காளி விலை சரிந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை நிலவரம்

அக்டோபர் 14ஆம் தேதி தக்காளி விலை தேசிய அளவில் சராசரியாக கிலோ ரூ. 67.50 என விற்பனையான நிலையில், நவம்பர் 14ஆம் தேதி 52.35-க்கு விற்பனையானது. இது முந்தைய விலையை விட 22.4% குறைவாகும்.

தலைநகர் ஆஸாத்பூர் சந்தையில் கடந்த மாதம் தக்காளி விலை குவிண்டால் ரூ. 5,883 என விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு குவிண்டால் தக்காளி விலை ரூ. 2,969 ஆக விற்பனையாகிறது.

மகாராஷ்டிரத்தின் நாசிக் தக்காளி, ஆந்திரத்தின் மண்டப்பள்ளி தக்காளி, பெங்களூரு - கோலார் தக்காளி விலையும் சரிந்துள்ளது.

2023 - 24ஆம் ஆண்டில் தக்காளியின் மொத்த ஆண்டு உற்பத்தி, 213.20 லட்சம் டன். இது 2022-23 ஆம் ஆண்டில் 4% அதிகமாக இருந்தது. ( தக்காளி ஆண்டு உற்பத்தி 204.25 லட்சம் டன்)

ஆண்டு முழுவதுமே தக்காளி விலைச்சல் இருந்தாலும், தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் பருவநிலை பொருத்து உற்பத்தியின் அளவு மாறுபடுகிறது.

பருவநிலை மாறுபாடு, போக்குவரத்தில் இடையூறு, எரிபொருள், உதிரிபாகங்கள் விலையேற்றம் போன்றவை தக்காளி விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது வரத்து அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால், தக்காளி விலை சற்று சரிந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியே.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT