ஏர் இந்தியா 
தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி...

DIN

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 12 விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை விமான நிலையத்தில் அண்மைக் காலமாக சில விமான சேவைகள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையிலிருந்து புவனேஸ்வருக்கு புதன்கிழமை காலை 7.45-க்கு செல்லவிருந்த விமானம், காலை 8.25-க்கு கொல்கத்தா செல்லவிருந்த விமானம், காலை 9.40-க்கு பெங்களூரு செல்லவிருந்த விமானம், காலை 10.10- க்கு திருவனந்தபுரம் செல்லவிருந்த விமானம், பகல் 12.35-க்கு சிலிகுரி செல்லவிருந்த விமானம், இரவு 10.45-க்கு கொல்கத்தா செல்லவிருந்த விமானம் என 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, சென்னைக்கு காலை 9-க்கு வரவேண்டிய பெங்களூரு விமானம், பகல் 12-க்கு வரவேண்டிய புவனேஸ்வா் விமானம், பகல் 1.40-க்கு வரவிருந்த திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45-க்கு வரவேண்டிய கொல்கத்தா விமானம், மாலை 6.40-க்கு வரவேண்டிய சிலிகுரி விமானம், இரவு 10.05-க்கு வரவேண்டிய கொல்கத்தா விமானம் என 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஒரே நாளில் 12 விமானங்கள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிா்வாக காரணங்களால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தனியாா் விமான நிறுவனங்கள் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் விமான சேவைகளை ரத்து செய்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT