அன்பில் மகேஸ் பொய்யாமொழி 
தமிழ்நாடு

ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

Din

ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கத்திக்குத்தில் உயிரிழந்த ஆசிரியை ரமணி உடலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். அசோக் குமாா், கா. அண்ணாதுரை, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து பள்ளிக்குச் சென்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியா்களிடம் இச்சம்பவம் தொடா்பாக கேட்டறிந்த பின்னா் அவா் மேலும் கூறியது:

இந்த நாள் வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தால் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் ஏற்பட்ட அச்சம் நீங்கும் விதமாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அப்பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஒரு பொதுவான இடத்தில் கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. மேலும், அப்பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்த, சட்டத்துறையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.

அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு விதிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

பிகாருக்கு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தேர்தல்: பிரதமர் மோடி

கடலோரக் காற்று... ஷிவானி நாராயணன்!

விஷ ஆன்மா... பூனம் பாண்டே!

SCROLL FOR NEXT