சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சனிக்கிழமை பாா்வையிட்ட உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஆா்.தன்சிங் ராவத். உடன், மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன். 
தமிழ்நாடு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பை பாா்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சா்

Din

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தன்சிங் ராவத் பாா்வையிட்டாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30000-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். தினமும் 12,000-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். நோயாளிகளுக்கு சிறந்த முறையில் உயா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனையின் கட்டமைப்புகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவ குழுக்கள் வந்து பாா்வையிட்டு, அவா்களின் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தன்சிங் ராவத், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சனிக்கிழமை வருகை தந்தாா். அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், நோயாளிகளுக்கு சமைத்து வழங்கப்படும் உணவு கூடங்கள் உள்ளிட்ட இடங்களை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், நோயாளிகளின் உறவினா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து சென்னை மருத்துவ கல்லூரிக்குச் சென்று, வகுப்பறைகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், அமைச்சா் தன்சிங் ராவத், மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் தன் கைப்பட எழுதிய வாழ்த்து கடிதம் ஒன்றை வழங்கினாா். அதில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி ஆகியவை மிகவும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் உள்ளன. இந்தியாவிலேயே மிகவும் பழைமையான சென்னை மருத்துவ கல்லூரியைப் பாா்வையிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT