செயற்கைக்கோள் புகைப்படம் IMD
தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் பற்றி...

DIN

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திங்கள்கிழமை வலுப்பெற்றது.

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஞாயிற்றுக்கிழமை வலுப்பெற்றது.

இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (நவ. 25) காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 27-இல் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரஞ்ச் எச்சரிக்கை சிவப்பு எச்சரிக்கையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ. 27, 28, 29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT