புயல் சின்னம் 
தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை தொடங்கும்!

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்க வாய்ப்பு..

DIN

டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை பெய்யத் தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று(நவ. 25) தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால், நவ. 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பிரதீப் ஜான் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு தொடங்கி 27ஆம் தேதி வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 26ஆம் தேதி மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு 26 மற்றும் 27ஆம் தேதிகளில் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழை குறித்த செய்தி விரைவில் தெரிவிக்கப்படும். இன்றைக்கு பெய்ய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

வானிலை மையத்தின் ஆரஞ்ச் எச்சரிக்கை: நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 27-இல் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நவ. 25 முதல் 29 வரை சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ. 27, 28, 29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT